கொய்யாப்பழத்தின் சத்துக்களும், ஆபத்துக்களும் என்ன?

0
934

“ஏழைகளின் ஆப்பிள்” என கொய்யாப் பழத்தினை அழைப்பார்கள், காரணம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

மேலும் ஆப்பிளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், கொய்யாப்பழத்திற்கு நாம் அளிப்பதில்லை. கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது.

வைட்டமின் ‘சி’

கொய்யாப்பழத்தில் வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் ‘சி’ உடலில் நோய் எதிர்ப்புத் சக்தியை அதிரிப்பதுடன் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.

சர்க்கரை அளவை குறைக்கிறது

கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால், நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும். மேலும், கொய்யாவில் லைக்கோபீனே அதிகமுள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்களை இது அழித்துவிடுகிறது.

guava-fruit-benefits-in-tamil-1
கர்ப்பிணிக்கும், கருவுக்கும்

கொய்யாவில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கும், கருவில் வளரும் கருவுக்கும் கண் குறைபாடு ஏற்ப்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து நரம்பியல் கோளாறுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

மது அடிமைகளை மீட்கும்

மது போதைக்கு மிகவும் அடிமையான மது பிரியர்கள் அந்தபழக்கத்திலிருந்து விடுதலை பெற நினைப்போர் கொய்யப்பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் எண்ணம் தூள் தூளாகி விடும். மதுவை விரைவில் நிறுத்தி விடலாம்.

செய்யக்கூடாதவை
  • சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
  • சாப்பிட்ட பின், அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன், கெய்யாவை சாப்பிட வேண்டும்.
  • கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும், சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.
  • அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு, அதேபோல், கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். இல்லாவிடில் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
  • கொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here