ஆண்களே கேளுங்க… உறவில் பெண்களின் உண்மையான உச்சக்கட்டம் எது தெரியுமா?

0
443

பாலியல் செயலைவிட ஒரு பெண்ணிடம் சந்தோசமாக பேசுவது அவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது

உங்கள் மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள், எந்த அளவுக்கு அவர்களை நேசிக்கிறீர்கள் என வார்த்தைகளால் விவரியிங்கள். உடலை விட முதலில் உள்ளத்தை அன்பால் வருடுங்கள்.

உங்கள் மனைவியை வருணியுங்கள். அவர்களது கண்கள், உதடு, குரல், கூந்தல் என உங்களுக்கு பிடித்தவற்றை அவர்களிடம் தெரிவியுங்கள்.

பெண்களின் உணர்ச்சி அவர்களின் உடம்பிலிருந்து வருவதில்லை, அது அவர்களின் உள்ளத்திலிருந்து வருகிறது. தனது கணவன் வெளியில் நடந்து கொள்வதை பொறுத்துதான் அது படுக்கையறையில் எதிரொலிக்கிறது.

வெளியில் நடப்பவை என்றால் அவர்களிடம் மதிக்காமல் பேசுவது, மோசமாக நடந்து கொள்வது அவர்களின் மனதை புண்படுத்தும். அதற்கு பதில் சிறு சிறு பரிசு, அன்பாய் பேசுவது, முக்கிய இடங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற செயல்கள் அவர்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். அது படுக்கையறையில் ஆனந்தமாக எதிரொலிக்கும்.

உறவில் உச்சக்கட்டம் என்பது முக்கியமான கட்டமாகும். உலகில் 60 சதவிகித பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. மனைவி உச்சக்கட்டத்தை அடைவதற்கு கணவன்தான் உதவவேண்டும்.

சிலர் உறவுகளில் அவசர அவசரமாக அனைத்தையும் முடித்துவிட்டு உறங்கிவிடுகிறார்கள். ஆனால் உறவில் இருக்கும் நெருக்கம், முன் விளையாட்டு போன்றவற்றால்தான் பெண்களுக்கு சிறப்பான உச்சக்கட்டம் கிடைக்கிறது.

அதற்க்காக, 100CC வாகனத்தை இயக்குவதைப்போல் மூர்க்கத்தனமாகச் செயல்படக்கூடாது. காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்வது, உறவின் போது கலகலப்பாக இருப்பது போன்றவை அதிக மகிழ்ச்சியைத் தரும்.

love-in-bedபெண்களை வெறும் காம உணர்வோடு தொடுதல்களைவிட, பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக் கொள்வது, முத்தமிடுதல் போன்றவைகள் முக்கியமான ஒன்றாகும். சில பெண்கள் படுக்கையறையை தவிர பிற நேரங்களில் தனது கணவர் முத்தம் தருவதில்லை என வருத்தப்படுவர்கள் உண்டு. ஆகையால் எப்பொழுதெல்லாம் விருப்பமோ அப்பொழுதெல்லாம் சில முத்தத்தைப் பரிசளியுங்கள்.

உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக, கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படி துள்ள வைக்கிறதோ, அதேபோல் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

உறவின்பொழுது ஆண்களிடம் என்டார்பின் இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாக கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும். அதற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here