இந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க…

0
443

உணவே மருந்து, மருந்தே உணவு என பழமொழியை கேள்விப்பட்டு இருப்பிர்கள். அதே போல் இந்தியாவில் உள்ள சில மசாலா பொருட்கள் உங்களது கலவி ஆசைகளை அதிகரிக்க செய்யும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சிலவற்றினை பார்க்கலாம். இவை ஆண்கள் மட்டும் அல்ல பெண்களுக்கும் எடுத்துக்கொள்ளலாம்.

indian spices for relationship

வெந்தயம்:

வெந்தயத்தில் சபோனிஸ் எனும் சத்து உள்ளது. இது ஆண்களுக்கு தேவையான ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோமினை உற்பத்தி செய்து ஆண்மை சக்தியை அதிகரிக்க செய்கிறது.

ஏலக்காய்

ஏலக்காய் உடல் சக்தியை அதிகரிக்க செய்து, உடல் சோர்விலிருந்து உங்களை விடுவிக்கும். உடல் ஆரோக்கியமாக மேலும் சக்தியுடன் இருந்தால் நீங்கள் நீண்ட நேரம் உங்கள் துணையுடன் தனிமையில் நேரத்தை செலவிட முடியும்.

கிராம்பு:

கிராம்பு உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் உங்கள் துணையுடன் மிக நெருக்கமாக இருக்கும் பொழுது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து கலவி ஆர்வத்தை தூண்டுகிறது.

பெருஞ்சீரகம்:

பெருஞ்சீரகத்தில் ஈஸ்டிரோஜென் எனும் சத்து அதிகளவில் இருப்பதால், இது விரைப்பு தன்மையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஜின்செங்:

சில ஆண்களுக்கு விரைப்பு தன்மையில் சில பிரச்சனை இருக்கும், அவர்களுக்கு இந்த ஜின்செங் வேர் அப்பிரச்சனைக்கு தீர்வினை அளிக்கும்.

குங்குமப்பூ:

குங்குமப்பூவை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது, மீறினால் சில பக்கவிளைவுகளை கொடுக்க வாய்ப்புள்ளது. குங்குமப்பூவில் பொட்டாஷியம், மெக்னீஷியம், ஜின்க் போன்றவை அதிகமாக இருப்பதால் கலவி ஆசையை அதிகரிக்க உதவும்.

ஜாதிக்காய்:

ஜாதிக்காயினை எடுத்துக்கொண்டால், வயாகரா மாத்திரைக்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது

பூண்டு:

பூண்டுடன் பச்சைமிளகாய் சேர்த்து சாப்பிடும் பொழுது கலவியில் ஈடுபடும் நேரத்தை அதிகரிக்க செய்யும் என நமது பழைய கால முறையில் உள்ளது.

இஞ்சி:

இஞ்சி சாப்பிடுவதால் கலவி ஆசையினை அதிகரிக்க செய்வதோடு, அதில் நீண்ட நேரம் செயல்படும் திறனும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.