பிளாஸ்டிக்கை பற்றி அதிர்ச்சி தரும் சில தகவல்கள்

0
443

இந்தியாவில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருட்களில் 70% பொருட்கள் கழிவுகளாக தான் போகின்றன.

ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 15,342 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அதாவது 568 கண்டெய்னர் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாக நம்மால் போடப்படுகின்றன.

ஒரு வருடத்தில் 5.6 மில்லியன் டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. குப்பையில் கிடக்கும் பழைய பிளாஸ்டிக் பைகளை சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலைகள் போடப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள கடற்பரப்புகளில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. அதிலும் இந்திய கடற்பரப்பில் மட்டும் 1.3 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

தென் இந்தியாவிலேயே அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தியும் பயன்பாடும் இருப்பது தமிழகத்தில் தான். பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த சுமார் 8000 தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இவற்றால் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தற்போது உள்ள பிளாஸ்டிக் தடையால் 8 லட்சம் ஊழியர்கள் வேலையின்றி தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதுமின்றி, அடுத்து என்ன நடக்கும்? என்ற பெரும் கேள்விக்குறியை எதிர்நோக்கி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here