தூதுவளைக் கீரையில் இவ்வளவு நன்மைகளா

0
443

நாட்டு வைத்தியம் மற்றும் சித்தவைத்தியத்திற்கு தூதுவளை நன்கு பயன்படுகிறது. இதன் மருத்துவ குணம், தெரிந்தவர்களை தவிர மற்றவர்கள் இதை உணவுப்பொருளாக கொள்ள மாட்டார்கள்.

இக்கீரையை கலவையோடு கலந்து தான் சமைப்பார்கள். இக்கீரையை சமையல், பொரியல், குழம்பு என்று சமைக்கா விட்டாலும், துவையலாகவோ, கஷாயமாகவோ செய்து சாப்பிட்டு உடல் நலத்தை காக்கலாம்.

இக்கீரையில் உள்ள பூ, காய், கொடி அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. முள் இல்லாமல் இதன் இலைகளை பறித்து சிறிது சிறிதாக அரிந்து கொண்டு, சிறு வெங்காயத்தோடு நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் இரைப்பு விலகும்.

இக்கீரையைக் கசாயமாய் காலை மதியம் ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால், வாயு குத்தல் குடைச்சல் நீங்கும். இதன் கொடி சிறிது சிறிதாக வெட்டி, மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து ரசம் வைத்து பருகினால், உடல் வலி காய்ச்சல் தீரும். டைபாய்டு, நிமோனியா போன்ற கடுமையான காய்ச்சலைக் குணமாக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது நல்ல ஞாபக சக்தியை தரும்.

தூதுவளை கீரையின் பயன்கள்

தாது புஷ்டியை தரும்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
குழந்தைகளின் கக்குவான் இருமல் தணிக்கும்
சளியை ஒழிக்கும்
காது சம்பந்தமான வியாதிகள் குணமாகும்
அஜீரணத்தை போக்கும்.

“தூதுவளை” என்றும் “தூதுவேளை” என்றும் அழைக்கப்படும். இந்த அருமையான கீரையை மாதம் ஒருமுறையாவது சாப்பிட்டு உடல் நலம் பெறுங்கள். இக்கீரையை பல்லாண்டுகளாக வைத்தியத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here