வாழைப்பழ பாயாசம் செய்யும் முறை

0
498

தேவையான பொருட்கள்

வாழைப்பழத் துண்டுகள் – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
பால் – 1/2 கப்
தேங்காய் விழுது – கால் கப்
வெல்லம் – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரி திராட்சை தலா – 2
நெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை

பாசிப் பருப்பை நன்றாக குழைய வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கிய வாழைப்பழம், தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பிறகு ஏலக்காய், திராட்சை, வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

இதில் மாவுச்சத்து, புரதம், இரும்புச்சத்து உள்ளதால் இது உடலுக்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here