அடர்த்தியான கூந்தலைப் பெற இயற்கை வழிகள்

பொதுவாக எல்லா பெண்களுக்கும் கூந்தல் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இன்றைய சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வேலை சூழலால் கூந்தலின் அடர்த்தி குறைகிறது. இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க இயற்கை முறையில் வழிகள் உள்ளது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை, கால் கிலோ நெல்லிகாய், சிறிது வேப்பங்கொழுந்து இவ்மூன்றையும் சிறிது நல்லெண்ணெய் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து, ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் இந்த எண்ணெயை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் முடி உதிர்வது குறைந்து, கூந்தல் அடர்த்தியாக வளர தொடங்கும்.

hair

ரோஜா இதழ்களை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதோடு நெல்லிக்காய் தூள், தான்றிக்காய் தூள், மருதாணி தூள், கருவேப்பிலை தூள், கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், சந்தனத்தூள் ஆகியவற்றை 10 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கவும். பிறகு இந்த கலவையை கொதிக்க வைத்து நான்கு நாட்கள் வெயிலில் வைக்கவும்.

பிறகு இந்த எண்ணெயை காட்டன் துணியில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதிகாலையில் இதை தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். காலையில் நேரம் இல்லாதவர்கள் இரவில் இப்படி செய்யலாம். இதனால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

கொட்டையில்லாத பேரிச்சம் பழத்தை 100 கிராம் எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்குங்கள். ஒருநாள் முழுவதும் இதை ஊறவிட்டு மறுநாள் இதை அரைத்து சம அளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்கள். இதையும் ஒரு வாரம் வெயிலில் வைத்து துணியில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த எண்ணெயை சிறிது எடுத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.

சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் கருவேப்பிலை பொடி கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளித்தாள், கூந்தல் வளர்ச்சி தூண்டப்பட்டு முடி கருமையாக வளரும். செம்பருத்தி இலைகளை விழுதாக அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து சீயக்காய் போட்டு குளித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

நான்கு சின்ன வெங்காயம், ஒரு கைபிடி கருவேப்பிலை இரண்டையும் விழுதாக அரைத்து, இதில் கெட்டித் தயிர் சேர்த்து தலைக்கு தேய்க்கவும். 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால் தலைமுடி நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதி வரும் வரை காய்ச்சி இறக்கவும். இந்த எண்ணெயை வடிகட்டி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

வெந்தயத்தை 4 மணி நேரம் நீரில் ஊறவைத்து இதை நைசாக அரைத்து தலைக்கு தேய்த்து ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். மேலும் உடல் குளிர்ச்சி பெறும்.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

after-work-out

உடற்பயிற்சி பண்ணியாச்சா? அதுக்கு அப்புறம் இதை செய்யாதிங்க…

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்