in

எலுமிச்சம்பழம் தொக்கு செய்யும் முறை

தேவையான பொருட்கள்

எலுமிச்சம் பழம் – 10
மிளகாய் தூள் – 100 கிராம்
கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய்,உப்பு – தேவையான அளவு
வெந்தய பொடி- கால் டீஸ்பூன்

செய்முறை

எலுமிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கிளறவும். எலுமிச்சம்பழம் தொக்கு ரெடி.

One Comment

Leave a Reply
  1. எலுமிச்சம் பழமா? … எலிமிச்சம் பழமா? … எலிமிச்சைதான் கரெக்ட் … ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் … அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் … ஏன்னா அது புளிப்பு…அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ”எலி மிச்சம் பழம்” என்று அன்போடு அழைத்து வருகிறோம்… https://www.scientificjudgment.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் புளி

மாங்காய் இஞ்சி தொக்கு செய்யும் முறை