நினைவாற்றல் அதிகரிக்க வல்லாரைக் கீரை தோசை

0
75

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை – ஒரு கப்
இட்லி அரிசி – 2 கப்
உளுந்து – அரை கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கீரையை நன்றாக ஆய்ந்து கொள்ளவும். அரிசி, உளுந்து, வெந்தயத்தை தனித்தனியாக ஊறவைத்து, பிறகு ஒன்றாக சேர்த்து அரைக்கவும். பாதி அறைந்த பிறகு வல்லாரை கீரையை போட்டு அரைக்கவும். பிறகு உப்பு போட்டு கரைத்து 8 மணி நேரம் கழித்து, தோசைக்கல்லில் ஊற்றி பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். காரச் சட்னி, தேங்காய் சட்னி அனைத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

பொதுவாக வல்லாரை கீரையில் நினைவாற்றல் மேம்படுத்தும் குணம் இருப்பதால், இது குழந்தைகளுக்கு நல்ல உணவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here