ருசியான காளான் மசாலா செய்வது எப்படி?

0
288

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய காளான் – அரைக் கிண்ணம்

எண்ணெய் இரண்டு – தேக்கரண்டி

வெங்காயம் – கால் கிண்ணம்

பொடியாக நறுக்கிய தக்காளி – இரண்டு

இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை

தனியா தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

சீரகத்தூள் – அரை தேக்கரண்டி

கரம் மசாலா – அரை தேக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

முந்திரி – 6

செய்முறை

ஒரு வாணலியில் பொடியாக நறுக்கிய காளானை தண்ணீர் இல்லாமல் வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும்.

முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அதை மசாலா கலவையுடன் சேர்த்து, அதோடு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இந்த காளான் மசாலா ஆப்பம், தோசைக்கு சேர்த்து சாப்பிடமிகவும் சுவையாக இருக்கும்.