பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

0
515

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டை பிரண்டை எனப் பலவகைகள் இருக்கிறது. இதில் அதிகமாக காணப்படுவது சாதாரண பிரண்டை தான்.

பிரண்டையின் தண்டுகளை ஒன்றாக சேகரித்து, அதன் மேல் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனை நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி சேர்த்து, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு கடுகு, உளுந்தம் சேர்த்து தாளித்து, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், ரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கும்.

பிரண்டை துவையல் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெறும். மூளை நரம்புகள் பலப்படும்.

முற்றிய பிரண்டை தண்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு, அதோடு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக பயன்படுத்தலாம். இதனை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், பசியின்மை, நாக்கு சுவையின்மை ஆகியவை குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து, அதில் 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டை துவையல் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதனால் எலும்புகள் உறுதியாக வளரும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாக கூடவும் இது உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here