அன்பு உணர்வைத் தூண்டும் தக்காளி பழம்

0
254

தக்காளிப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் உட்பட ஏழு விதமான தாது உப்புக்கள் உள்ளன. இவற்றால் ரத்தம் நன்கு சுத்தம் செய்யப்படுகிறது. குடல் பகுதி நன்கு சுத்தம் செய்யப்படுவதால், நோய்க்கிருமி எதுவும் ரத்தத்தில் தங்காது.

உடலுக்கு வலிமையூட்டும் கால்சியம், மூளைக்கு வலுவூட்டும் பாஸ்பரஸ் தக்காளியில் உள்ளது.

இப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம், சாறுபிழிந்தும் பருகலாம். நல்ல பலனைத் தரும்.

‘தக்காளி சூப்’ செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.

தக்காளி பழம் சாப்பிடுவதால் உடலும், உள்ளமும் எப்போதும் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். இதனால் பிற மனிதர்களிடமும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களிடமும் அன்பு செலுத்தும் குணம் இயல்பாக வருகிறது. எனவே தினமும் ஒரு கப் தக்காளி சாறு காலையில் தவறாமல் அருந்தி வாருங்கள்.

அன்பை மட்டும் அல்ல. காதல் உணர்வை தூண்டும் அதிக பழமும் தக்காளிதான். தக்காளிப் பழத்தில் லைகோபைன் என்ற பொருள் இருக்கிறது. இந்த பொருள் தான் காதல் உணர்வையும், தாம்பத்திய வாழ்வில் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

எல்லாவற்றையும் விட இது ஒரு நச்சு முறிவு மருந்தாகும். இதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.

இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் காதல் உணர்வு அதிகம் கொண்ட தம்பதிகள், காதலர்கள் உள்ள நாடுகளாக திகழ்கிறது. இந்த இரு நாட்டுக்காரர்களும் உலகில் அதிகமாக தக்காளி சாறு, தக்காளி சாஸ் வகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.