குடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.

0
669

குடல் புண்ணுக்கு முட்டைகோஸ் மிகவும் உகந்தது. முட்டைகோஸை வேகவைத்து, அதன் நீரில் சிறிது மிளகைத் தட்டிப்போட்டு சூப்பாக சாப்பிட்டு வந்தால், குடல் புண் குணமாகும்.

பச்சை மஞ்சளை பசுமையாய் அரைத்து சிறிதளவு சில நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய், குழந்தை பிறந்த பின்பு வரும் வலி, சூதகம் போன்ற நோய்கள் வராது. மேனிக்கும் பளபளப்பு உண்டாகும்.

அல்சர் பிரச்சனைக்கு நல்ல தீர்வு

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர 2 தினங்களில் குடல்புண் குணமாகும். குடல் புண், வாய்புண், தொண்டைபுண் எதுவானாலும் சரி. அத்தி மரத்தின் பட்டையை நன்றாக இடித்து சாறு எடுத்து இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் இரண்டு அவுன்ஸ் பசும்பாலை கலந்து கற்கண்டு போட்டு சாப்பிட புண்கள் குணமாகி விடும். குடலில் புண் இருந்தாலும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இலையை சுத்தம் செய்து கசக்கி சாறு எடுத்து காலை மாலை சிறிதளவு சாப்பிட்டு வர குணமாகும்.

உலர்ந்த திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியை குணப்படுத்தி அடிக்கடி தாகம் ஏற்படுவதை குறைக்கும். தேங்காய் அல்லது தேங்காய் பால் சாப்பிட குடல் புண் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here