நடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்

0
523

ராமநாதபுரம் முன்னாள் எம்.பியும் நடிகருமான ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானர். கானல் நீர், நாயகன், LKG போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஜே கே ரித்தீஷ் குமாருக்கு வயது 46. கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக எம்பியாக வெற்றி பெற்றார். ஜே கே ரித்தீஷ் குமார் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். தற்போது ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மாரடைப்பால் காலமானர்.

இந்த செய்தி ராமநாதபுரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.