NGK திரை விமர்சனம்

0
503
என்.ஜி.கே திரை விமர்சனம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், இளவரசு, பொன்வண்ணன் என பலர் நடித்த என் ஜி கே திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சூர்யா முதுகலைப் பட்டம் பெற்று விட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதனால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் சூர்யாவுக்கு சொந்தமான நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர். தனது பிரச்சனையை தீர்க்க சூர்யா தனது ஊரை சேர்ந்த எம்எல்ஏவிடம் தொண்டனாக சேர்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சூர்யா அரசியலை கற்றுக்கொள்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சூர்யா எப்படி சமாளித்தார்? அவருடைய இயற்கை விவசாயம் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை.

செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

சமூக சேவகர், அரசியல் நுழைவு, அரசியலில் எழுச்சி என சூர்யா தனது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அரசியல்வாதிகளாக வரும் இளவரசு, பொன்வண்ணன், பாலாசிங், வேல ராமமூர்த்தி தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.