அன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்

0
248

அன்னாசிப்பூ என்பது மிகுந்த மருத்துவ குணங்கள் உடையது. அன்னாசிப்பூ மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியது. இதில் ஆன்டி ஆட்சிடென்ட், வைட்டமின்-ஏ வைட்டமின்-சி போன்ற பல சத்துக்கள் இருக்கிறது. இது நட்சத்திர வடிவம் கொண்ட ஒரு மசாலா பொருள். இது தெற்கு சீனாவில் உருவானது.

இது பெரும்பாலும் இந்திய மற்றும் சீன சமையல் முறைகளில்
பயன்படுத்தப்படுகிறது. இது ஜீரணத்திற்காகவும், உணவு வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது. அன்னாசிப் பூவின் கலோரிகள் குறைவு, எனவே, உடல் பருமன் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் போது இதை அதிகளவு சேர்க்கலாம்.

இது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளளும் போது ஜீரண கோளாறுகளை நீக்கி மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது. இரத்த செல்களின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு இது தீர்வு அமைகிறது.

அன்னாசி பூ விலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி, வறட்சி, சரும நோய்கள் போன்றவைறைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது. அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்தஅழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து.

வளரும் குழந்தைகளுக்கு அன்னாசிப்பூ கொடுக்கும் போது அவர்கள் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். அதிகமான உணவு எடுத்துக் கொண்டவர்கள் ஜீரணமாகாமல் சிரமப்படுவதுண்டு. அவர்கள் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயனம் கலந்த பானங்களை பயன்படுத்தாமல் அன்னாசிப்பூவினை பொடி செய்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக அஜீரண கோளாறு நீங்கும்.