கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள்

0
173

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு கரிசலாங்கண்ணி இலையை அரைத்து, சாறு எடுத்து தடவினால், புண்கள் மிக விரைவில் ஆறிவிடும்.

கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும்.

கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்க கரிசலாகண்ணி பயன்படுகிறது.

கரிசலாங்கண்ணி கண் பார்வையைத் தெளிவு பெற செய்யும். பார்வை நரம்புகளை பலப்படுத்தும். புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். கரிசலாங்கண்ணி நரம்பு தளர்ச்சியை போக்கும்.

மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்த்து, தினமும் ஒரு வேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், சுவாச நோய்கள் தீரும்.

கரிசிலாங்கண்ணி இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றுக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.