சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி

0
440

நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவையாக உள்ளன.

நித்தியகல்யாணி இந்தியாவின் பல பகுதிகளில் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. பின்பு, மருந்து தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்றி மீட்டர் உயரம் வளரும் செடியாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் நித்தியகல்யாணி மலர் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது. அதிகளவில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்களுக்கு நித்திய கல்யாணி ஒரு அற்புதமான மருந்து பசியின்மையைப் போக்கும் தன்மை கொண்டது. அதிக படபடப்பு உள்ளவர்களின் நாடியை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. உடல் சோர்வை போக்கும்.

புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பில் நித்தியகல்யாணி மலர் பயன்படுத்தப்படுகிறது. மன நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளிலும் இந்த மலர் பயன்படுகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இந்த மலர் பயன்படுகிறது.

இதை எப்படி சாப்பிடுவது?

இந்த மலரை காலை ஒன்றும் மாலையில் ஒன்றும் சாப்பிடலாம். 5 அல்லது 6 மலர்களுடன் இரண்டு டம்ளர் நீர் விட்டு ஒரு டம்ளராக வரும் வரை நன்கு காய்ச்சி, ஆறிய பிறகு அதை ஒரு நாளைக்கு 4 முறை பிரித்து பருகலாம். இந்த தாவரத்தின் வேரை எடுத்து காயவைத்து பவுடர் செய்து, அதை கால் தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு 3 முறை பருகி வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here