தெற்கு முகம் நோக்கிய திருப்புவனம் பிள்ளையார் கோவில்

0
145

இறைவழிபாட்டில் பிள்ளையாரின் பங்கு மிக முக்கியமானது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் விலக்கு பகுதியில் ஒரு பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். அவரை விசாலாட்சி பிள்ளையார் என்று அழைக்கிறார்கள்.

பொதுவாக பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பார் ஆனால் இக்கோவிலில் திசைமாறி தெற்கு முகமாக இருக்கிறார்.

திசை மாறிய தெய்வங்களுக்கு சக்தி அதிகம் என கூறுவார்கள். இக்கோயிலில் பக்தர்கள் தேங்காயை மாலையாக கட்டி, பிள்ளையாருக்கு அணிவித்து, நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

இப்பிள்ளையாரை தரிசித்தால் முருகனை வணங்கிய பலன் கிடைக்கும் என்றும் கடன் தொல்லை நீங்கி பலம் பெறலாம் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

இவர் தெற்கு முகமாக அருள்பாலிப்பதால் குரு பலனும் பெறலாம். இங்கு குரு பெயர்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. பிள்ளையாரை வணங்க சங்கடஹர சதுர்த்தி நாள் சிறந்தது.

சங்கடங்களைத் தீர்த்து வைப்பதால் இதற்கு சங்கடகரசதுர்த்தி என்ற பெயர். சங்கடகர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி பிள்ளையாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் .