ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

0
285

திருவண்ணாமலை சுவாமி ராஜகோபுரம் வழியாக வருவதில்லை பக்கத்துக்கு வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன் வளராது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே வீதி வலம் வருகிறார் .

குமரி மாவட்டம் கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் உள்ளது.

எல்லா கோவிலிலும் பெருமாள் இடது கையில் சங்கு காணப்படும். திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு இருக்கும்.

காசியில் பல்லிகள் இருந்தாலும் அது ஒலிப்பதில்லை.

காசி நகரை சுற்றி  45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

ரத்தினகிரி முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் தயிராக மாறும் .

ரத்தினகிரி மலை மீது காகம் பறப்பதில்லை.

சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் புளிப்பதில்லை.

ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லால் ஆனது , அதை தட்டினால் வெண்கல ஓசை வரும்.

சமயபுரம் மாரியம்மன் திருமேனி மூலிகைகளால் ஆனது .

இமயமலை பத்ரிநாத் கோவில் நவம்பர் மாதம் மூடப்படும், அப்போது ஏற்றும் தீபம் மீண்டும் நடை திறக்கும் வரை எரியும், சுமார் ஆறு மாத காலம் அந்த தீபம் எரியும் என்கிறார்கள்.

திருநெல்வேலி பாபநாசம் திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம், ருத்ராட்சத்தால் ஆனது. இதுபோன்ற சிவலிங்கத்திருமேனியை வேறெங்கும் காண்பது அரிது.

பாடல் பெற்ற சிவதலங்களில் காவிரி வடகரையில், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள திருத்தலம் திருக்கனூர் இங்குள்ள அம்பாள் திருநாமம் சிவலோகநாயகி. இந்த‌ அம்பாளின் விக்கிரகம் முழுவதும் சளாக்கிராமத்தால் ஆனது.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் உள்ளது கோதண்டராமர் திருக்கோயில். இங்கே கருவறையில் நின்ற கோலத்தில் அருளும்  ரமான், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் (முலவர்) விக்கிரத் திருமேனிகள் சாளக்கிராமத்தில் ஆனது என்பர். மேலும், கருவறையில் அனுமனுக்குப் பதிலாக சுக்ரீவன் காட்சி தருவது இந்தத்தலத்தின் விசேசம். இந்த விக்கிரகங்களின் சுமார் 1400 ஆண்டுகள் பழைமையானவை என்கிறார்கள்.