in

கொரோனா பாதிப்பு.. தொழிலாளர்கள் அவதி.. களத்தில் இறங்கிய விஜய்சேதுபதி..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பெரும் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலித் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமாத்துறை, சின்னத்திரை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பெப்சி ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி பெப்சி ஊழியர்களுக்கு உதவ ரூபாய் 10 லட்சத்தை அளித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி, சிவக்குமாரின் குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும் வழங்கி உள்ளனர்.

இதனைப்போன்ற பிற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பயணிகளுக்கு Sanitizer வழங்கும் ரோபோ

“இது தான் கொரோனா Kiss-ஆ..” லிப்-லாக் அடித்த சீரியல் நடிகை – வைரல் போட்டோ