in

கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க யாகம் நடத்திய நடிகை ரோஜா

தற்போது உலகை கடும் அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 4,17,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18,625 பேர் உலக அளவில் இதுவரை இந்த தொற்று பாதிப்பால் உயிழந்துள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் “ருத்ராபிஷாகம்” என்ற யாகத்தினை நடத்தினர்.

கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக நடிகை ரோஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

“நமக்காக அவங்க இல்ல..” மச்சான்களுக்கு நமீதாவின் உருக்கமான பதிவு

Anasuya Bharadwaj New Pics