in

அரசமரத்தின் மருத்துவ குணங்கள்

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் இலை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று.

அரசமரத்தின் மருத்துவ பயன்கள்

அரச மரத்தின் கொழுந்து இலை, ஆல மரத்தின் கொழுந்து இலை, அத்தி மரத்தின் கொழுந்து இலை மூன்றையும் சமஅளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் குடித்தால் மலத்தில் ரத்தம் போவது நிற்கும்.

அரச மரத்தின் அடி மரக் கட்டையைப் பொடி செய்து, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, காலை மாலை இருவேளையும் குடித்துவந்தால் மேக நோய் குணமாகும்.

அரச மரப் பட்டையை எரித்துச் சாம்பலாக்கி அதைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

அரச மரத்தின் பழம், வேர், பட்டை ஆகியவற்றைக் காயவைத்துப் பொடி செய்து, பாலைக் காய்ச்சி அதில் கலந்து குடித்தால் ஆண்மை பலம் உண்டாகும்.

அரச இலையைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

அரச இலையை எரித்து, தேங்காய் எண்ணெய்யில் குழைத்து உடலில் தடவிவந்தால் தீப்புண் தழும்புகள் மறையும்.

அரச மரத்தில் இருந்து பால் எடுத்து, காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

அரச மரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

அரச மரக் குச்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

அரச இலையை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு உருண்டை அளவுக்குச் சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *