in

“கமலுக்கு கொரோனாவா” மாநகராட்சி செய்த தவறு.. கமல் அதிரடி செயல்..

கொரோனா வைரசை தடுப்பதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படுகிறது.

ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளில் இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசன் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பின்னர் அகற்றப்பட்டது. இதனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், கமல்ஹாசன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக தான் 2 வாரங்களாக, தனிமைப்படுத்தலை மேற்கொண்டிருக்கிறேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது, கவுதமிக்கானது என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *