in

உங்களுக்கு தெரியுமா?..தேனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்

தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம். வைத்தால் அதன் உணவுச் சத்துக்கள் குறைந்து விடலாம். தேனை நன்றாக மூடிய ஜாடிகளில் உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

தேன் நீண்ட நாள் இருக்கும் பொருள். அதனால் ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து, கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் வைக்கவும். தேன் நீண்ட நாள் வைக்க உகந்தது.

நீண்ட நாள் ஆனாலும் அது உண்ணுவதற்கு உகந்தது. எளிதில் ஜீரணமாகும். அது தேனடையில் இருக்கும் வரை தேன் மெழுகால் ‘சீல்’ செய்யப்படுவதால் நீண்ட நாள் கெடவே கெடாது. தேனடையில் இருந்து எடுத்த பின் அதன் தரம் குறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் அதை பொருத்தமான பாத்திரங்களில் வைக்கவும்.

உலோக பாத்திரங்களில் வைக்க கூடாது. வைத்தால் ஆக்சிடேஷனால் அதன் ஊட்டச்சத்துக்கள் குறைவது மட்டுமன்றி தேன் விஷமாகவும் மாறலாம். கண்ணாடி ஜாடிகள் தான் தேனை பாதுகாக்க சிறந்தவை. அவற்றிற்கு அடுத்த படி பீங்கான் ஜாடிகள். தேன் ஜாடிகளை வேறு உணவுப் பொருள்களுடன் வைக்க வேண்டாம்.

சரியாக பாதுகாக்கப்பட்ட தேன் குறைந்த பட்சம் இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும். இரண்டு வருடங்களுக்குள் உபயோகப்படுத்துவது நல்லது. வெயில் நாட்களில் தேனை உட்கொள்வதை தவிர்க்கவும். சூடான தேனை உட்கொள்ள வேண்டாம். கீரை, தக்காளி, மணத்தக்காளி இவற்றுடன் தேன் உட்கொள்ள வேண்டாம்.

வெதுவெதுப்பான தேன் இனிப்பு இருக்கிறதென்று அதிகமாக அளவுக்கு மீறி உட்கொள்ள வேண்டாம்.

சம அளவில் கலந்த நெய்யையும், தேனையும் சாப்பிடக் கூடாது. தேனை சூடான மசாலா நிறைந்த உணவுகள், மது வகைகள், மழை நீர், நெய் மற்றும் கடுகெண்ணையுடன் கலந்து உட்கொள்ளக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய ராசி பலன் (25/03/2020)

கொரோனா நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன?