in

கொரோனா நல்லது.. சந்தோசத்தில் இருக்கும் பிரபல ஹீரோ.. காரணம் தெரியுமா..?

பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு, சுசேன்னா என்ற பெண்ணோடு கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், இரண்டு பேரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

மேலும், அவர்களது 2 மகன்களும், ஹிருத்திக் ரோஷன் கவனிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதால், இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மகன்கள் வீட்டில் தனிமையில் முடங்கி கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஹிருத்திக் ரோஷனின் வீட்டுக்கு வந்து மகன்களுக்கு துணையாக இருக்கிறார் சுசேன்னா.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஹிருத்திக் ரோஷன், தனது முன்னாள் மனைவிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தீயவை பல நடந்து வந்தாளும், குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்கிறோம், காற்று மாசு குறைந்துள்ளது, ஒலி மாசு குறைந்துள்ளது போன்ற நல்ல விஷயங்களும் சில நடந்திருக்கிறது.

இதனைப்பார்க்கும்போது, காலுக்கு எப்படி செருப்பு வந்தது.. முள்ளுக்கு நன்றி சொல் எனும் வைரமுத்துவின் வரிகளே நினைவுக்கு தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *