in

தோனி ஸ்டைலில் வீட்டை சுத்தம் செய்யும் கத்ரீனா கைஃப்.. வைரலாகும் வீடியோ..

உலகையே மிரட்டி வரும் கொடூரன் என்றால், அது கொரோனா தான். இன்றைய அளவில் உலகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனால், உலகில் பல்வேறு முக்கிய நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப்பும் பிரதமர் மோடி பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறார்.

இதனால், வீட்டில் நேரத்தை செலவிடுவதற்கு பல்வேறு வீட்டு வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு படியாக, இன்று வீட்டை துடைப்பத்தால் பெருக்கினார்.

https://www.instagram.com/p/B-KHTu_hu9Y/?utm_source=ig_embed

இதுதொடர்பான வீடியோவையும் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *