in

நடிகை பரவை முனியம்மா காலமானார்.

நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. 

2003ம் ஆண்டு விக்ரம் நடித்த தூள் படத்தில் பாடகியாகவும், நடிகையாகவும் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்தார். 

கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பரவை முனியம்மா இன்று மதுரையில் அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

பரவை முனியம்மா, கிராமத்து பாடல்கள் மூலம் உலகப்புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பரவை முனியம்மாவின் மறைவால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி அடைந்ததோடு, அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *