in

பொக்கேலாம் பழைய பேஷன்.. அமைச்சருக்கு பார்த்திபன் கொடுத்த “கொரோனா கிஃப்ட்..”

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மிகவும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பார்த்திபன், விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன் என்று தெரிவித்தார்.

பொக்கே கொடுப்பதற்கு பதிலாக 5 லிட்டர் ஹேன்ட் சானிடைசரை பரிசாக வழங்கினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், திருமண மண்டபங்கள் போன்றவற்றை மருத்துவ உதவிக்கு முன்னதாகவே தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் ஆலோசனை அளித்தேன் என்று பார்த்திபன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தடையை மீறி பயணம் | தோப்புக்கரணம் போட வைத்த போலீஸ்

முழு நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ஷாக்.. ஏன் தெரியுமா..?