in

சமூக சேவைகளிலும் கலக்கும் நடிகை சமந்தா

சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி” படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இதையடுத்து சமந்தாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய், சூர்யா விக்ரம் தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழில் நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல் போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

அவர், கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத் திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். சமந்தா நடிப்பையும் தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *