in

சோ க்யூட்.. இது தான் செம்பாவின் குழந்தையா..? புகைப்படம் வெளியிட்ட சஞ்சீவ்.. ஆனா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.

இவர்களை இந்த பெயரில் அழைப்பதை விட, செம்பா மற்றும் கார்த்திக் என்று அழைத்தால் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, அந்த இரண்டு கேரக்டர்களும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

இவர்கள் இருவரும் உண்மையான புருஷன் பொண்டாட்டி என்கிற அளவுக்கு நடிக்கிறார்களே.. ஒருவேளை காதலிக்கிறார்களோ என்று நெட்டிசன்கள் கிசுகிசுக்கித்த நிலையில், ஆம் என்று இருவரும் உண்மையை ஒத்துக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் திடீரென திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்பா கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் குழந்தையின் கை மட்டும் தெரியும் படி உள்ளது.

இதனைக்கண்ட நெட்டிசன்கள், அந்த புகைப்படம் சூப்பராக உள்ளது. ஆனால், எதற்காக கையை மட்டும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளீர்கள் என்றும், எப்போது குழந்தையின் முழு புகைப்படத்தை வெளியிட்டுள்ளீர்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *