in

சத்தான சோயா பீன்ஸ் சுண்டல்

தேவையானவை:


சோயாபீன்ஸ் – 1கப்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி
இஞ்சி – சிறிதளவு பொடியாக நறுக்கியது.
கருவேப்பிலை – 1கொத்து,
கடுகு – தாளிக்க,
பச்சைமிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தாளிப்பதற்கு
பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை:

சோயா பீன்ஸை முதல்நாள் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் நன்கு வேகவிடவும்.

வாணலியில் கடுகு கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் தாளித்து வெந்த சோயாபீன்ஸை வடிகட்டி இதில் போட்டு உப்பும் போட்டு தேங்காய் துருவலும் போட்டு வதக்கி இறக்கவும். (விரதம் இல்லாதவர்கள் இஞ்சி பூண்டு வெங்காயம் அரைத்து தாளிக்கும் போது பச்சைவாசனை போகும் படி வதக்கியும் போடலாம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *