in ,

ஆண்கள் எப்போது வயதுக்கு வருகின்றனர்..? பெற்றோர்கள் படிக்கவேண்டிய தொகுப்பு..!

இந்திய கலாச்சாரங்களில் ஆண்களுக்கு ஒரு விதமான பழக்க வழக்கங்களும், பெண்களுக்கு ஒரு விதமான பழக்க வழக்கங்களும் உள்ளன.

ஆண்களுக்கு, அழுகை வரக்கூடாது, கஷ்டத்தை பகிறக்கூடாது போன்ற பழக்கங்களும், பெண்களுக்கு, கால் மீது கால் போடக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது போன்ற பழக்கங்களும் எழுதப்படாத விதிமுறைகளாக உள்ளது. ஆனால், அனைவரும் சமம் என்பதே சரியான விதிமுறையாகும்..

இவ்வாறு இந்திய சமூகத்தில் எழுதப்படாத விதிகளில் ஒன்று குழந்தைகள் பூப்படைதல். அதாவது வயதுக்கு வருதல்.. பெண் பிள்ளைகள் மட்டுமே வயதுக்கு வந்தவர்களாக இந்திய சமூகத்தில் பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான மனம் மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் மட்டும் பெற்றோர்களால் கவனிக்கப்படுகிறது. ஆனால், ஆண் பிள்ளைகளுக்கான உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு ஆண் எப்போது வயதுக்கு வருகிறான் என்பது தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். காரணம் அவனுள் ஏற்படும் சில மாற்றங்கள், பயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நமக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா, நாம் மற்றவர்களில் இருந்து தனித்தவர்களா போன்ற பயங்களும், சந்தேகங்களும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் இயல்பு என்பதை பெற்றோர்கள் எடுத்துக்கூறுவது அவசியமான ஒன்று என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது வயதுக்கு வந்தவுடன் ஆண் பிள்ளைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காணலாம்..

நிலை 1:- இது தான் ஆரம்ப நிலை. இந்த நிலையில், ஆண் குறி குழந்தை பருத்தில் இருந்ததைப்போன்றே இருக்கும்.

நிலை 2:– இந்த 2-ஆம் நிலை 10 முதல் 15 வயது வரையில் இருந்து தொடங்குகிறது. இந்த நிலையில், ஆண்குறி அளவில் சற்று மாறுபடும். ஆண்குறியின் நுனி சிவந்து மெல்லியதாகவும் பெரியதாகவும் மாறும்.

நிலை 3:– 3-ஆம் நிலை 10 முதல் 16 வயது வரையில் இருந்து தொடங்குகிறது. இதில் ஆண்குறி நீளமாகும். விந்தணுப்பை விரிவடையும். இப்பொழுது அந்தரங்க பகுதியில் அதிகமாக நீளமான கருப்பு நிற சுருண்ட முடிகள் வளரத் தொடங்கும்.

நிலை 4:- 4-ஆம் நிலை 12 முதல் 17 வயது வரையில் இருந்து தொடங்குகிறது. ஆணுறுப்பு நீளமாகவும் தடினமாகவும் வளர ஆரம்பிக்கும். நம் தலையில் இருக்கும் முடியைப் போல அந்தரங்க பகுதியில் முடிகள் வளர்ந்து சுருண்டு போய் இருக்கும்.

நிலை 5 :- விந்தணுக்கள் அளவு 20 மி. லி ஆக அதிகரித்து இருக்கும். விந்தணுப்பை ஆணுறுப்பு எல்லாம் பெரியவர்கள் போல மாற்றம் பெற்றிருக்கும். வயது வந்தோர் மாதிரி அந்தரங்க முடிகள் காணப்படும்.

இந்த 5 நிலைகளில் இருக்கும் மாற்றங்கள் மட்டுமன்றி, உடல் தசைகள் இருக்கமாகும், தோள்கள் விரிவடையும், குரல்கள் கம்பீரமாக இருக்கும், உயரம் மற்றும் எடை அதிகரிக்கும், உடலில் வியர்வையின் நாற்றம் அதிகரிக்கும், முகத்தில் பருக்கள் உண்டாகும், ஆணுறுப்பு இரவு நேரத்தில் விறைப்புத்தன்மையை பெறும், இரவில் தூக்கத்தில் விந்தனு வெளியேறும் போன்ற மாற்றங்கள் ஆண் பிள்ளைளுக்கு ஏற்படுவதுண்டு.

இத்தகைய மாற்றங்கள் சிறு வயதில் புதியதாக அவர்களுக்கு ஏற்படுவதால், அவர்கள் அச்சம் அடைய நிறை வாய்ப்புகள் ஏற்படுவதுன்டு எனவே, இவை அனைத்தும் இயல்பான ஒன்று தான் என்று பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தட்டுக்கழுவும் கத்ரீனா.. Bum Dance போடும் திஷா.. இத பாத்தா கொரோனா கதறி அழுமே..

தரைப்பசலைக் கீரையின் நன்மைகள்