in

நுகர்வோர் உரிமைகள் தினம் பற்றி சில தகவல்கள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World Consumer Rights Day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி இடம்பெற்றது.

நுகர்வோரின் உரிமைகள் என்ன?


நுகர்வோர்கள் பலருக்கும் அவர்களுக்காக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிமை உண்டு.

நுகர்வோருக்கு அந்தப் பொருள் சரி, தவறு என சுட்டிக்காட்டவும், போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் ஒரு நுகர்வோரை எச்சரிக்கவும் உரிமை உண்டு.

நியாயமற்ற வியாபார முறைகள், தயக்கமற்ற சுரண்டல் குறைகளைத் தீர்க்கும் உரிமை. நுகர்வோரின் உண்மையான குறைகளை நியாயமான முறையில் தீர்த்து வைப்பதற்கான உரிமையும் இதிலடங்கும்.

உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகப்பு பெறும் உரிமை.

நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

நுகர்வோருக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், உடை ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும்.

நுகர்வோர் தான் வாங்கிய பொருளில் அந்நிறுவனம் கூறியதற்கு மாறாக இருந்தால் உடனடியாகக் அதுகுறித்த புகாரை கூறலாம். அதை அந்நிறுவனமும் கேட்கவேண்டும். அலட்சியப்படுத்தக்கூடாது. பின் நுகர்வோருக்கு அந்தப் பொருளை வங்கியதால் ஏற்பட்ட நட்டத்தை அந்நிறுவனம் ஈடு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *