in

ஓஓஓ.. அப்படியா சங்கதி.. முதல்வரை சந்தித்த யோகிபாபு..!

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகிபாபு. இவர் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் இருந்த இவர், பார்கவி என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததால், பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்படும் என்று யோகி பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது ரிசப்ஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக, முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து, அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா..? வெளியான அப்டேட்..!

இன்றைய நாள் எப்படி (25-03-2020)