in

ஊரடங்கு உத்தரவை மீறிய விஜய்சேதுபதி..! நெகிழ்ச்சி காரணம்..? புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர், பல்வேறு தரப்பினருக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாடலாசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்ற பண்முகத்தன்மை கொண்ட நெல்லை பாரதி நேற்று அதிகாலை காலமானார்.

அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்துள்ளார் விஜய்சேதுபதி. அதுமட்டுமின்றி, நெல்லை பாரதியின் குடும்பத்தினருக்கு, பண உதவியும் செய்திருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.

இவரது இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையிலும், தன்னுடைய உடல்நலம் குறித்து எந்த கவலையும் இல்லாமல், வெளியே சென்று உதவி செய்துள்ளதால் தான் இவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார் என்றும் நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *