in

கொரோனாவால் பிரபல நடிகர் பலி

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.

இதனைத்தொடர்ந்து பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று உள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆண்ட்ரு ஜேக் கொரோனா பாதிப்பால் பிரிட்டனின் சுர்ரே பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

இவர் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் 7,8 பாகங்களில் நடித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *