in

ஊரடங்கு உத்தரவு – சன்னி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

இன்றைய தலைமுறையினருக்கும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை சன்னி லியோன்.

இவர் தமிழில், வடகறி திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். இல்லை.. இல்லை.. கவர்ச்சியை கொட்டியிருப்பார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இருக்கும் அந்த பாடல்.

இதையடுத்து, வீரமாதேவி என்ற திரைப்படத்தில் சன்னி நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அதன்படிப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எப்போதும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன், ஊரடங்கு உத்தரவையொட்டி தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டை அளித்திருக்கிறார்.

அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், லாக்குடு அப் வித் சன்னி என்ற நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை, நடிகைகளின் ஃபன்னான இன்டர்வியூக்கள் இருக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல் எபிசோட் நேற்று நடந்து முடிந்த நிலையில், அதில் அனிஷா தீக்சித் என்ற யு-டுயூபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செலிபிரட்டி இன்டாவுயூக்கள் எடுக்க சன்னி லியோன் காத்துக்கிடக்கிறார் என்றும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *