in

கொரோனாவின் கொடுரம் – பசியால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட நபர் – வைரலாகும் வீடியோ

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான பசியுடன் போராடுகிறார்கள்.

இந்நிலையில், டெல்லி – ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவில், அந்த நபர் டெல்லி நோக்கி செல்கிறார், அப்போது சாஹபுரா சாலையில் அடிப்பட்டு இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்த பிரதுமன் சிங் நருகா அவருக்கு அருகே சென்று அதனை சாப்பிடவேண்டாம் என கூறி, அவருக்கு உணவு மற்றும் தண்ணீரும் வழங்கினார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, முகநூலில் நருகா வெளியிட்டுள்ள பதிவில், பசியின் கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பாரத்து நான் அதிர்ச்சியடைந்தேன், பிறகு அவருக்கு உணவும், தண்ணீரும் கொடுத்தேன், ஆனால் இதனை பார்த்த எவரும் அவருக்கு உதவ முன் வரவில்லை என நினைக்கும் போது எனக்கு கவலையளிக்கிறது. தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *