in

நெருப்பு குமார் அடுத்து இயக்கப்போவது யாரை தெரியுமா..? தெரிஞ்சா சர்ப்ரைஸ் ஆவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், நடிகருமானவர் அருண்ராஜா காமராஜ். மான் கரத்தே படத்தில் வரும் நெருப்பு குமார் கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்த இவர், நெருப்புடா பாடல் மூலம் மேலும் பரிட்சையமானார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கணா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் அடுத்ததாக யாரை வைத்து இயக்குவார் என்று பல்வேறு பேச்சு அடிப்பட்டது.

தளபதி விஜயை வைத்து இயக்குவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியாக நடிகர் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்திருக்கிறார்.

பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆர்டிக்கல் 15 என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *