in

தாய்லாந்து ஏன் பாலியல் தொழிலின் தலைநகரமாகியது..? சொல்ல மறந்த கதை..?

உலகில் விபச்சாரம் அதிகம் நடைபெறும் நாடு எதுவென்று கேட்டால், நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது தாய்லாந்து நாடு தான். எதனால், அந்த நாட்டில் இப்படியொரு நிலை ஏற்பட்டது. அதற்கு பின்னால், இருக்கும் சோகம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

பல்வேறு இந்திய மன்னர்கள் ஆண்ட பிறகு, கடைசியாக தாய்லாந்து நாட்டை ஆண்ட மன்னர் வம்சாவழி ஆயுத்தா. இது, முழுக்க முழுக்க தாய்லாந்து மக்களின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாகும்.

இந்த அரசு, 1500-களில் தங்களது கைகளால் ஆட்சியை நடத்த துவங்குகியது. ஆனால், அவர்களால் நாட்டு மக்களுக்கு உணவு கூட தர முடியவில்லை. காரணம், அந்த அளவிற்கு மிகவும் பஞ்சம் பட்டினியால் தாய்லாந்து அரசு சூழ்ந்து இருந்தது.

இந்த பிரச்சனையில் இருந்து வெளியேறுருவதற்காக, அப்போது ஆட்சியில் இருந்த அரசு தான், விபச்சார விடுதிகள் நடத்துவதை சட்டப்பூர்வமாக மாற்றி உத்தரவை பிறப்பித்தது. அதன்பிறகு அந்த நாட்டில் சுற்றுலாத்துறை மிகவும் செழிப்படைந்தது.

இவ்வாறு தான் விபச்சார தொழில் முதன்முறையாக தாய்லாந்து நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக நுழைகிறது.

இதற்கிடையே, அமெரிக்க நாட்டை சேர்ந்த படை வீரர்கள், இரண்டாம் உலகப்போரின்போது, பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது, அவர்களுக்கு உடல் ரீதியான தேவை இருக்கும் என்பதால், அவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை பயன்படுத்திக்கொண்டனர்.

இப்படி தொடர்ந்து தாய்லாந்து அரசு இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், 1960-களில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த அதிபர், விபச்சார விடுதிகள் வேண்டும் என்று கருதினால், தாய்லாந்து நாட்டிற்கு செல்லுங்கள். எங்கள் நாட்டில் அதுபோன்று எதுவும் இல்லை என்று பேட்டி கொடுக்கிறார்.

இவர் எதார்த்தமாக இந்த பேட்டியை அளிக்க, அது உலகம் முழுவதும் பெரும் அவமரியாதையை தாய்லாந்து நாட்டிற்கு கொண்டு வந்தது. இதன்காரணமாக, தாய்லாந்து நாட்டு அரசு, விபச்;சார விடுதிகள் நடத்துவதை தடை செய்தது.

ஆனால், அதன்பிறகு அந்நாட்டு அரசால் அவ்வளவு சீக்கிரமாக முன்னேற முடியவில்லை. இவ்வாறு இருக்க, சிலர் அந்த தொழிலை சட்டவிரோதமாக செய்ய முன்வந்தனர். மேலும், அந்நாட்டில் இருக்கும் சில அரசியல்வாதிகள் மூலம் தான் இந்த தொழில் அங்கு நடத்தப்பட்டு வந்தது.

இதன்காரணமாக, விபச்சார விடுதிகள் மூடப்படவில்லை. மேலும், இதனை அரசாங்கமும் பெரிதாக பொருட்படுத்திக்கொள்ளவில்லை. இதனால், மசாஜ் சென்டர், பார், கேளிக்கை விடுதிகள் என்ற பெயரில் விபச்சார தொழில் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால், அந்த நாட்டில் இன்றளவும் விபச்சார விடுதிகள் நடத்துவது சட்டவிரோதமானது தான். அங்கிருக்கும் பெண்கள் இதனை விருப்பத்தோடு தான் ஏற்றுக்கொள்கின்றனரா என்றால் நிச்சயமாக இல்லை.

அந்த நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்பின்மை காரணமாக தான், கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இந்த தொழில் ஈடுபடுகின்றனர்.

இன்னும் ஷாக்கிங்கான தகவல் என்னவென்றால், குறைந்தபட்சம் ஒரு பெண் அவ்வாறு உறவில் ஈடுபடுவதற்கு குறைந்தபட்சம் 25 ரூபாய்க்கு கூட வருவார்களாம்.

தாய்லாந்தின் மிகவும் கேளிக்கையான ஒரு முகம் மட்டும் தானே நமக்கு தெரியும், ஆனால், அந்நாட்டிற்கு இப்படியொரு சோகமான முகமும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *