in

அரசியல் வசனம் பறக்கும் விஜய்சேதுபதியின் க/ பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியீடு

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், பெ.விருமாண்டி இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் க/ பெ ரணசிங்கம். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில், சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.

இப்படத்தில், தண்ணீருக்காக போராடும் ஒரு கிராமத்து பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார், இப்படத்தில் அரசியல் வசனங்கள் பரபரப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும் திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக தோன்றுகிறார்.

இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடித்து வெளிவந்த அறம் படத்தின் இயக்குநர்தான் இந்தபடத்திற்கும் இயக்குநர்என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *