in

“காத்துவாக்குல ரெண்டு காதல்” படப்பிடிப்பு எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். மே மாதம் தொடங்க வேண்டிய படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *