in

Trending No 1.. கார்த்திக் டயல் செய்த எண்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த திரைப்படம் வின்னைத்தாண்டி வருவாய.

2010-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றளவும் பல்வேறு காதல் ஜோடிகளுக்கு மிகவும் பேவரைட் படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் கௌதம் மேனன், அதே கூட்டணியை வைத்து, கார்த்திக் டயல் செய்த எண் என்று குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கான டீசர் வெளியானதும், உச்சப்பட்ச எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள், தற்போது குறும்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

விண்ணைத்தாண்டி வருவாயாவின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில், எழுத்தாளர்களுக்கு உரியதான ரைட்டர்ஸ் பிளாக் பிரச்சனையில் கார்த்திக் சிக்கிக்கொள்கிறார்.

அவரை அதில் இருந்து மீட்க ஜெஸ்ஸி எவ்வாறு உதவுகிறார் என்பது போல கதையமைத்து இருக்கிறார்கள்.

இந்த குறும்படம் வெளியான 24 மணி நேரத்தில் டிரெண்டிங் நம்பர் ஒன்னில் உள்ளது. தற்போது வரை 2.2 மில்லியன் பார்வையாளர்கiளை கடந்துள்ள இந்த குறும்படம், இரண்டறை லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *