in

“என் குடும்பத்தை பிரிச்சது கூகுள் மேப் தான் சார்” – புதுவித புகாரால் விழி பிதிங்கி நின்ற போலீஸ்

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான கூகுள் மேப்பால் 49 வயதான எனக்கும் எனது மனைவிக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. அதனால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறையில் சந்திரசேகர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சந்திரசேகர் என்பவர் மயிலாடுதுறையில் ஃபேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவர் மனைவிக்கும் சில நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது. இந்த கருத்து வேறுபாட்டிற்கு கூகுள் மேப்தான் காரணம் என புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், “கூகுள் மேப் நான் செல்லாத இடத்திற்கு எல்லாம் சென்றதாகத் தெரிவிக்கிறது. இதனை பார்த்து என் மனைவி என்னை சந்தேகப்படுகிறாள். கூகுளை நம்பும் அளவிற்கு, உறவினர், பிள்ளைகள் என யார் பேச்சையும் என் மனைவி நம்புவதில்லை”

குறிப்பாகக் கடந்த மே 20ஆம் தேதி தான் செல்லாத இடத்திற்குச் சென்றதாகக் கூகுள் மேப் தெரிவித்துள்ளது. இதனால் தனது குடும்பமே இப்போது சிதைந்துவிட்டதாகவும் சந்திரசேகர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவை பார்த்த போலீசாருக்கு சற்றுநேரம் தலை சுற்றிவிட்டது. பிறகு போலீசார், கணவன் மனைவியை அழைத்து முதலில் கவுன்சிலிங் வழங்கலாம், பின் ஒத்துவரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அப்போது முடிவெடுப்போம் என போலீசார் என முடிவெடுத்துள்ளனர். FIR எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *