in

பாகிஸ்தான் விமானம் விபத்தில் 86 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் (pia) நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-320 ரக (The PIA Airbus A320) விமானம் 85 பயணிகள், 9 சிப்பந்திகள் ஆகிய 99 பேருடன் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்றது.

விமானம் தரையிரங்க சில விநாடிகளே இருந்த நிலையில் திடீரென அந்த விமானம் அங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 86 பேர் உயிரிழந்தனர். லேண்டிங் கியர் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *