in ,

ஏன் ஆபாச பட நடிகையானார் சன்னி..? முழு வரலாறு இதோ..!

திபெத்தை பூர்வீகமாக கொண்ட ஆணிற்கும், ஹிமச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணிற்கும், 1981-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதுவே சன்னி லியோன். கனடாவில் பிறந்த இவரது உண்மையான பெயர், கரேன்ஜித் கவுர் வோஹ்ரா.

சாதாரண இந்தியன்-கனடா பெண்ணாக வளர்ந்து வந்த சன்னி லியோன், தனது 18-வது வயதில், குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு குடிபெயர்கிறார். அங்கு நர்சிங் படித்து வந்த சன்னி லியோன், பகுதி நேரமாக பேக்கரி உட்பட பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்தார்.

எப்படியாவது நடுத்தர குடும்ப வாழ்க்கையில் இருந்து மீள வேண்டும் என கருதிய சன்னி லியோனிற்கு, தனது 19-வது வயதில் பத்தரிக்கை ஒன்றில் மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு சன்னி லியோனின் பெற்றோர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனையெல்லாம் மீறி, ஒருவழியாக பெற்றோர்களின் சம்மதத்தை பெறுகிறார் சன்னி லியோன். மாடலிங் துறையில் பெரும் பிரபலம் அடைந்ததையடுத்து, அவருக்கு ஆபாச பட உலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சன்னி லியோன், உள்ளே நுழைந்த சில காலங்களிலேயே மிகவும் பிரபலம் ஆகிவிடுகிறார். இதற்கிடையே, அமெரிக்காவில் இருக்கும் சில இந்தியர்கள், சன்னி லியோனிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்குகின்றனர்.

இந்தியர்களின் மானத்தை வாங்காதே, இந்த தொழிலில் ஈடுபடாதே என்று கூறுகின்றனர். இருப்பினும், தொடர்ந்து சன்னி லியோன் நடித்து வந்தார். கடைசியாக, இந்த தொழில் இருந்து விடுபட நினைத்த சன்னி லியோன், பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துக்கொண்டார்.

சன்னி லியோன் யார் என்று தெரியாமல் இருந்தபோது, நெருங்கி பழகிய பலரும், அவர் யார் என்று தெரிந்தப்பிறகு புறக்கணிக்கத் தொடங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், பாலிவுட் சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

ஆனால், அவருக்கு அந்தரங்கம் சார்ந்த படங்களில் நடிக்கவே நிறைய வாய்ப்பு கிடைத்தது. இதனால் மிகவும் வருத்தமடைந்த சன்னி லியோன், தன்னுடைய ஆபாச பட நடிகை என்று அடையாளத்தை அழிக்க நினைத்தார்.

இதையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தார். ஒரு இந்திய குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார்.

பல்வேறு இடையூறுகளை மீறி, விடா முயற்சியின் மூலம் திறமையை வளர்த்துக்கொண்ட சன்னி லியோன், தற்போது இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவரது இந்த வளர்ச்சிக்குறித்து பேட்டி ஒன்றில் கேட்டபோது, உங்களுக்கு சரி என்பதை தொடர்ந்து செய்துக்கொண்டிருந்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று தெரிவித்தார். இன்று சன்னி லியோனின் பிறந்தநாளை யொட்டி, அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *