in ,

செம தீனி போங்க.. கமல் படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்..?

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவர், பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி, கமலின் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அவரது கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜய்சேதுபதி, நாசரின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தந்தையின் கொலைக்கு பலி வாங்கும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே, இந்த திரைப்படத்திலும் விஜய்சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரமே கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரம், விஜய்சேதுபதியின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக அமையும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *