in

போனி கபூரின் வீட்டிற்குள் நுழைந்த கொரோனா..? இவ்வளவு பேர் பாதிப்பா..?

பாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், தமிழில், அஜித்தை வைத்து நேர் கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

தற்போது, அஜித்தையே வைத்து வலிமை என்ற படத்தை எடுத்து வருகிறார். மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் போனி கபூர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது வீட்டில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, வீட்டில் இருந்த மற்ற நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன் முடிவு தற்போது வெளியான நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *