Connect with us

TamilXP

புத்தாண்டு ராசிபலன்கள் – 2021

ஆன்மிகம்

புத்தாண்டு ராசிபலன்கள் – 2021

2021 ஆம் ஆண்டு விரைவில் பிறக்கப் போகிறது 2020 ஆம் ஆண்டு உலகின் மிக மோசமான ஆண்டாக மாறிவிட்டது. இந்தநிலையில் வரப்போகும் புதிய வருடமாவது நமக்கு நன்மைகளை தருமா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லாவித நன்மைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே குடும்பத்தாரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த வரன்கள் அமையும். காதல் திருமணம் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.

உங்கள் ராசிக்கு சனிபகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் உணவு கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மன உளைச்சல் படிப்படியாக குறைந்து தெளிவான சிந்தனையைக் கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எல்லா விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆளாகலாம். பணவரவு நன்றாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அதேபோல் குடும்பத்தில் கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகலாம். எனவே கவனத்தோடு இருப்பது நல்லது.

கலைத் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பல நாள் ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும்.

நவக்கிரகத்தில் சுக்கிரனை வழிபட்டு வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.

மிதுனம்

மிதுனராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு ஏற்படும். நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம். எனவே எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

புதிய தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கும். தைரியம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக படித்தால் வெற்றி பெறலாம். மிதுன ராசியில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தாள் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய நபர்களின் நட்பு உருவாகும்.

வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருத்தவரை நல்ல பலன்கள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சிறு சிறு சண்டை சச்சரவுகள் உருவாகலாம். இதனால் தேவையற்ற மன உளைச்சலும் உருவாக வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் பேச வேண்டும்.

கன்னி ராசி உள்ள பெண்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், குழப்பங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.

செப்டம்பர் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நட்பு உருவாகும்.

வெள்ளிக்கிழமை தோறும் கன்னி ராசிக்காரர்கள் துர்க்கை அம்மனை வணங்கி வந்தால் நல்ல பலன்களை தரும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி முடிந்தவுடன் சிறப்பான முன்னேற்றம் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வரப்போகும் சவால்களை திறமையாக சமாளிப்பீர்கள்.

பணவரவு சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

பெண்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் உருவாகும். முடிந்தவரை அன்னதானம் செய்து வாருங்கள்

துலாம்

துலாம் ராசியை பொறுத்தவரை கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி கொண்டே இருக்கும். இதனால் நல்லதும் கெட்டதும் சேர்ந்து நடக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்படலாம்.

உங்களுக்கு வாழ்க்கை துணையாக இருப்பவர்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு காரணமாக அமைவார்கள். பெற்றோர்கள் மீதும் பிள்ளைகள் மீதும் கவனத்தை செலுத்தி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

ஆண்டின் தொடக்கத்தில் பணவரவில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஆண்டின் இறுதியில் நல்ல லாபம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளின் தொந்தரவு நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பணவரவு நன்றாக இருப்பதால் வீட்டுக்கு தேவைப்படக் கூடிய பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு காதல் திருமணம் வெற்றி பெறும். பணத்தை முதலீடு செய்வதில் வெற்றி காண்பீர்கள்.

துலாம் ராசிக்காரர்கள் பசுமாட்டிற்கு தீவனம் கொடுத்து வந்தால் நன்மைகள் உருவாகும். வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்து வருவதால் பாவம் நீங்கி அதிர்ஷ்டம் உருவாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்தால் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். கடன் தொல்லை நீங்கும்.

குடும்பத்தை பொறுத்தவரை அதிக சவால்களை எதிர் கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில்துறை மற்றும் வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும்.

தொழில்ரீதியாக போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்சாகமாக செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண ரீதியான விஷயங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. ஆண்டின் இறுதியில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் பல வழிகளில் பணம் உங்களுக்கு வந்து சேரும். பெண்கள் மே மாதத்தில் தேவையில்லாத மன கஷ்டங்களை சந்திக்கலாம். அக்டோபர் மாதத்திற்கு பிறகு சுபகாரியங்கள் நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீண் செலவுகள் ஏற்படலாம்.

தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் நீங்கி வியாபாரம் வளர்ச்சி அடையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். கல்வியில் உயர்வு உண்டாகும்.

தனுசு ராசிக் காரர்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இதனால் நல்ல காரியங்கள் கைகூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீன் வாக்குவாதம் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் அமையும். அது நல்ல லாபத்தையும் தரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீ ர்கள். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சனை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சி நீடிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உருவாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

சனிக்கிழமைகளில் விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் அமைதி நீடிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரத்தில் செலவுகளும் இருக்கும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் உருவாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்கள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் தைரியமாக இருப்பார்கள். அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனத்தோடு இருப்பது நல்லது. பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். பணத்தில் வரவும் செலவும் சேர்ந்த காணப்படும். வாகனங்களால் செலவு ஏற்படும். சொத்துகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செய்துவந்தால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமையும் வீண் அலைச்சலும் உருவாகும்.

வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தாரிடம் சிறு சிறு சண்டைகள் உருவாகலாம். கவனம் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உருவாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.மற்றவர்களை நம்பி பொறுப்புகளை பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் கூடுதலாக கவனம் செலுத்துவார்கள். கல்வி தொடர்பான பயணங்கள் உருவாகும்.

வெளியூர்களுக்கு செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய முன்கோபத்தால் வீண் தகராறு ஏற்படலாம். கவனமாக இருங்கள்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் உடல் நலம் சீராகும். பொருளாதாரம் சிறப்பாக காணப்படும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top